மோடி அரசு ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்

மோடி அரசு விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை செலவிட்டது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம்!!

2014 ஜூன் முதல் 2024 மார்ச் வரை தொலைக்காட்சி விளம்பரங்களுக்கு மட்டும் ரூ.2,974 கோடி செலவிட்டுள்ளது மோடி அரசு. விளம்பரங்களுக்கு மட்டும் 10 ஆண்டுகளில் ரூ.3,641 கோடியை மோடி அரசு செலவிட்டது ஆர்.டி.ஐ. மூலம் அம்பலம் ஆகி உள்ளது. இது குறித்து அஜய் பாசுதேவ் என்பவர் ஆர்டிஐ மூலம் தகவல் பெற்றுள்ளார். கடந்த 10 ஆண்டுகளில் தொலைக்காட்சி, ரேடியோ, இணையதளம்,எஸ்எம்எஸ் மூலமாக விளம்பரங்கள் கொடுக்க ஒன்றிய அரசு பயன்படுத்திய நிதி குறித்து அவர் கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் பதில் அளித்து இருந்தது.