மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து
அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர்…மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து
மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், பீகார் தலைநகர் பாட்னா அருகில் அரச குடும்பத்தில் பிறந்த மகாவீரர், அரச வாழ்வை துறந்து, தமது செல்வத்தையெல்லாம் மக்களுக்கு தானமாக வழங்கியவர்.
அகிம்சையை கடைபிடிக்க வேண்டும், கொல்லாமையும், பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையுமே அறம் என்பதை மக்களுக்கு விளக்கி, அகிம்சை நெறியை உலகிற்கு உணர்த்தியவர்.அவரது பிறந்தநாளை கொண்டாடும் இந்நாளில், தமிழகத்தில் அவரின் போதனைகளை பின்பற்றி வாழும் ஜைன சமுதாய மக்கள் அனைவருக்கும் எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.