காங். தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்

இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை நடத்தி வருகிறார்:

இந்தியாவில் பிரதமர் மோடி ஊழல் பள்ளியை நடத்தி வருவதாக காங். தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். முழுமையான ஊழல் பாடத்தின் கீழ் நிதி, வர்த்தகம் குறித்து பாஜக தலைவர்களுக்கு பிரதமர் மோடி வகுப்பு எடுக்கிறார். சோதனைகளை நடத்தி எப்படி நன்கொடை வசூலிப்பது என விசாரணை அமைப்புகளுக்கு மோடி வகுப்பு எடுக்கிறார். நன்கொடை பெற்ற பிறகு ஒப்பந்தங்களை எப்படி வழங்குவது எனவும் மோடி வகுப்பு எடுக்கிறார். ஊழல்வாதிகளை வாஷிங் மெஷின் மூலம் எப்படி சலவை செய்வது என்பது குறித்தும் மோடி பாடம் நடத்துகிறார் என்று ராகுல் விமர்சனம் செய்துள்ளார்.