நடிகை குஷ்பு “Vote 4 INDIA”
இந்தியா கூட்டணிக்கு ஓட்டு கேட்ட நடிகை குஷ்பு, பின் விளக்கமளித்து பதிவு
நடிகை குஷ்பு “Vote 4 INDIA” என்று தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தான் வாக்களித்த பிறகு, தனது சமூக வலைதள பக்கத்தில் Vote4INDIA என்று பதிவிட்டுள்ளார்.
குஷ்பு தான் வாக்களித்த புகைப்படங்களை ட்விட்டர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து #Vote4INDIA மற்றும் #VoteFor400Paar என்று கூறியிருந்தார்.
அவரது இந்த பதிவு பா.ஜ.க.வினர் மற்றும் பா.ஜ.க. கூட்டணியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணிக்கு இந்தியா கூட்டணி என்று பெயரிட்டுள்ளனர். இந்த நிலையில், இந்தியா கூட்டணியை ஆதரிக்கும் விதத்தில் குஷ்பு பதிவிட்டிருப்பது பா.ஜ.க.வினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில்,
“Vote 4 இந்தியா” என்று பதிவிட்டது தொடர்பாக அவர் அளித்த விளக்கத்தில்,
இந்தியாவிற்காக வாக்களியுங்கள் என்ற நோக்கத்தில்தான் அவ்வாறு பதிவிட்டதாகவும், இந்தியா கூட்டணியை நான் ஒருபோதும் ஆதரித்ததில்லை என்றும் குஷ்பு விளக்கம் அளித்தார்.
Vote 4 INDIA என்ற ஹேஸ்டேக்குக்கு விளக்கம் அளித்து மீண்டும் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் அவர், “இந்தியாவுக்கு வாக்களியுங்கள் என்பதை படித்தவர்களால், என் பயோவில் மோடி குறித்தும் 400 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற வாக்களியுங்கள் என்று இருந்ததை எப்படி வாசிக்க முடியாமல் போனது
தோல்வியை பெற போகிறவர்கள் விரக்தியின் உச்சத்தில் உள்ளார்கள் என்று என்னால் சொல்ல முடியும். இது உங்களது பயத்தை காட்டுகிறது. பொறுத்திருந்து பாருங்கள், இந்த முறை மோடி தான் வருவார். பாஜகவிற்காக இந்தியா வாக்களிக்கும்” என்று கூறியுள்ளார்.