ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள்
கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள் பதிவாவதால் அதிர்ச்சி
கேரளாவில் பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள் பதிவாவதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. காசர்கோடு தொகுதியில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது பாஜகவுக்கு 2 ஓட்டுகள் பதிவானது கண்டு எதிர்க்கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 4 வாக்குப்பதிவு இயந்திரங்களில் பா.ஜ.க.வுக்கு ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 வாக்குகள் பதிவாகும்படி மென்பொருள் இருப்பதாக புகார் எழுந்தது.
9 வேட்பாளர்கள் மற்றும் நோட்டாவுக்காக ஒரு முறை பட்டனை அழுத்தும்போது பா.ஜ.க. தவிர மற்றவர்களுக்கு ஒரு ஒப்புகைச் சீட்டு மட்டுமே வருகிறது. ஒரு முறை பட்டனை அழுத்தினால் பா.ஜ.க.வுக்கு மட்டும் 2 ஒப்புகைச் சீட்டு வருகிறது. பா.ஜ.க.வுக்கு இரண்டு வாக்குகள் பதிவாவது குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் புகார் அளித்துள்ளனர்.