ராமநாதபுரம்: நாளை மறுநாள் வாக்குப்பதிவு
ராமநாதபுரம்: நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் ராமநாதபுரத்தில் வாக்காளர்களுக்கு பணம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. ராமநாதபுரம் கொத்த தெருவில் வாக்காளர்களுக்கு வீடு வீடாக பணம் விநியோகம் செய்து வருகின்றனர். எந்த கட்சியின் வேட்பாளருக்காக பணம் விநியோகம் என தேர்தல் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.