ஐசிஎப் வளாகத்தில் சென்னை ரயில் கண்காட்சி
ஐசிஎப் வளாகத்தில் உள்ள சென்னை ரயில் அருங்காட்சியகத்தில் உலக பாரம்பரிய நாளை ஒட்டி சிறு ரயில் மாதிரி கண்காட்சி
உலக பாரம்பரிய நாளை ஒட்டி, ஐசிஎப் வளாகத்தில் உள்ள சென்னை ரயில் அருங்காட்சியகத்தில் 18.04.2024 (வியாழன்), 20.04.204 (சனி) மற்றும் 21.04.2024 (ஞாயிறு) ஆகிய நாட்களில் சிறு ரயில் மாதிரி கண்காட்சி நடைபெற உள்ளது. இந்த மூன்று நாட்களிலும் பல்வேறு வகையான சிறு இயங்கும் ரயில் மாதிரிகள் (running train models) பார்வையாளர்களின் முக்கியமாக சிறுவர்களின் பார்வைக்காக கண்காட்சியில் வைக்கப்பட உள்ளன. இந்த கண்காட்சி இந்த மூன்று நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும்.
இந்த கண்காட்சியை காண உங்களை அன்புடன் அழைக்கிறோம். கண்காட்சியில் வைக்கப்பட உள்ள சில மாதிரிகளின் புகைப்படங்களையும் இத்துடன் இணைத்துள்ளோம்
பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால், அதிக அளவில் பள்ளி மாணவ, மாணவியர் மற்றும் குழந்தைகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.