UPSC தேர்வில் தமிழகத்தில் முதலிடம் பிடித்த புவனேஷ் ராம்!
2016 முதல் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருகிறார். பிஎஸ்சி இயற்பியல் பட்டதாரியான புவனேஷ் ராம் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார்.
2023ஆம் ஆண்டுக்கான யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் இறுதித் தேர்வு முடிவுகள் இன்று வெளியான நிலையில், தமிழ்நாட்டில் இருந்து புவனேஷ் ராம் என்னும் மாணவர் முதலிடம் பிடித்துள்ளார். அவர் அகில இந்திய அளவில் இவர் 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.
இவர் 2016 முதல் யுபிஎஸ்சி தேர்வுக்குத் தயாராகி வருகிறார். பிஎஸ்சி இயற்பியல் பட்டதாரியான புவனேஷ் ராம் சென்னையைச் சேர்ந்தவர் ஆவார். இவர் 2019 யுபிஎஸ்சி தேர்வில் அகில இந்திய அளவில் 496ஆவது இடத்தைப் பெற்று இருந்தார். இந்த நிலையில் தற்போது அகில இந்திய அளவில் 41ஆவது இடத்தைப் பெற்றுள்ளார்.