பிரதமர் மோடி வாழ்த்து
மத்திய அரசின் சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்தவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,
“2023ஆம் ஆண்டு சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்ற அனைவரையும் நான் வாழ்த்துகிறேன். அவர்களின் கடின உழைப்பு, விடாமுயற்சி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கு பலன் கிடைத்துள்ளது. இது பொது சேவையில் நம்பிக்கைக்குரிய வாழ்க்கையின் தொடக்கத்தைக் குறிக்கிறது. அவர்களின் முயற்சிகள் எதிர்காலத்தில் நமது தேசத்தின் எதிர்காலத்தை வடிவமைக்கும். அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.” என பதிவிட்டுள்ளார்