தேனி தொகுதி அதிமுக வேட்பாளரின் காரில் சோதனை
தேனி தொகுதி அதிமுக வேட்பாளர் நாராயணசாமி வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். வேட்பாளருடன் பரப்புரைக்கு வந்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வாகனத்திலும், முன்னாள் எம்எல்ஏ- க்களின் வாகனங்களிலும், சோதனை நடத்தினர். தேனி தொகுதிக்கு உட்பட்ட உத்தப்பநாயக்கணூர் கல்லூத்து பகுதிகளில் பரப்புரைக்கு வந்தபோது ஆய்வு நடத்தப்பட்டது.