ஒப்புகைச்சீட்டை 100% எண்ண கோரி வழக்கு
ஒப்புகைச்சீட்டை 100% எண்ண கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை
மக்களவை தேர்தலில் ஒப்புகைச் சீட்டுகளை 100 சதவீதம் எண்ணக்கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. மின்னணு வாக்கு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை சரிபார்க்க விவிபாட் சிலிப்புகளை 100% எண்ணக் கோரி வழக்கு தொடரப்பட்டது. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபாங்கர் தத்தா அமர்வு வழக்கை விசாரிக்க உள்ளது.