நீலகிரியில் குளுகுளு சீசன் துவங்கியுள்ளது

அருவங்காடு ..ஏப்ரல். 12 .. ஆண்டுதோறும் ஏப்ரல் மே மாதங்களில் நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் துவங்கும் தற்போது பத்தாம் வகுப்பு மாணவ மாணவியருக்கு தேர்வு முடிந்துள்ள நாட்களில் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிக்கு விடுமுறை அளிக்கப்படுவதால் கோடை சீசனை அனுபவிக்க தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகள் சேர்ந்த சுற்றுலா பயணிகளும் வர துவங்கியுள்ளனர் நேற்று இரவு முதல் மாவட்டம் முழுவதும் கனமழை பெய்ததால் நீலகிரியில் குளுகுளு சீசன் துவங்கியுள்ளது இதனை அடுத்து தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பூங்காக்களில் ஏற்கனவே நடவு செய்யப்பட்ட மலர் செடிகள் பூத்துக் குலுங்க தயாராக உள்ளது மேலும் சுற்றுலா பயணிகளை திருப்திப்படுத்தும் வகையில் சிறப்பு கண்காட்சிகள் நடத்தப்பட்டு காய்கறி கண்காட்சி ரோஜா மலர் கண்காட்சி . பழ கண்காட்சி வாசனை திரவிய கண்காட்சி பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொள்ள தோட்டக்கலை துறையினர் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் சமவெளி பகுதிகளில் கடும் வெயில் சுட்டெரித்து வருவதால் இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்திற்கு அதிகாரிகள் சுற்றுலா பயணி வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது