மடிக்கணினித் திட்டம்
அதிமுக ஆட்சிக்கு வந்தால் மீண்டும் மடிக்கணினித் திட்டம் செயல்படுத்தப்படும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேனியில் தெரிவித்தார்.
தேனி அதிமுக வேட்பாளர் நாராயணசாமிக்கு ஆதரவாக தேனியில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சியில் நிறுத்தப்பட்ட மடிக்கணினி திட்டம் அதிமுக ஆட்சிக்கு வந்த பின்பு தொடரும். மாணவ, மாணவியருக்கு 52 லட்சம் மடிக்கணினிகள் அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டன என்றார்.