நீலகிரி மாவட்டத்தில்

நீலகிரி மாவட்டத்தில் முதுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வறட்சியின் காரணமாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதனால் கடும் வறட்சி ஏற்பட்டு காட்டு தீ கடந்த சில நாட்களாக அங்கங்கே ஏற்பட்டது. இந்த நிலையில் மசினகுடி அருகே இருக்கக்கூடிய வனப்பகுதியில் மர்ம நபர்கள் தீவைத்துள்ளனர். அவர்கள் வைத்த தீ மூங்கில் மரங்கள் எறிந்த நிலையில் அருகில் இருக்கக்கூடிய வனப்பகுதிக்கும் மளமளவென பரவியது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.