நாகப்பட்டினம் மக்களவைத் தொகுதி- ஒரு பார்வை

நாகப்பட்டினம் கீழ்வேளூர் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி (தனி), திருவாரூர், நன்னிலம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

நாகப்பட்டினம் கீழ்வேளூர் (தனி), வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி (தனி), திருவாரூர், நன்னிலம் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கியது.

இந்த 6 சட்டமன்ற தொகுதியையும் ஒன்றிணைந்த நாகை பாராளுமன்ற தொகுதியில் விவசாய தலித் சமூதாயத்தை சேர்ந்த வாக்காளர்கள் அதிகமானோர் உள்ளனர். இதனையடுத்து மீனவர்கள், இஸ்லாமியர்கள் மற்றும் இதர சமூதாயத்தினர் உள்ளனர்.

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதியில் கடந்த முறை அதிமுக, திமுக நேரடி போட்டியில் களம் கண்டது. முதலிடம் அதிமுக வேட்பாளரான கே.கோபால் எம்.பி : 4,34,174 வாக்குகளும் இரண்டாவது இடத்தை திமுக வேட்பாளரான AKS. விஜயன் 3,28,095 வாக்குகளும் பெற்றனர்.

நாகை பாராளுமன்றத் தொகுதியில் இதுவரை காங்கிரஸ் 4 முறையும், இந்திய கம்யூனிஸ்ட் 5 முறையும், திமுக 4 முறையும், அதிமுக ஒரு முறையும் வெற்றி பெற்றுள்ளன.

இதுவரை இந்தத் தொகுதியில் மக்களவை உறுப்பினர்களாக இருந்தவர்களின் பட்டியல்

1957 – அய்யாகண்ணு மற்றும் சம்பந்தம் – காங்கிரசு

1962 – கோபால்சாமி – காங்கிரசு

1967 – சாம்பசிவம் – காங்கிரசு

1971 – காத்தமுத்து – சிபிஐ

1977 – எசு.ஜி. முருகையன் – சிபிஐ

1980 – தாழை.மு. கருணாநிதி – திமுக

1984 – மகாலிங்கம் – அதிமுக

1989 – செல்வராசு – சிபிஐ

1991 – பத்மா – காங்கிரசு

1996 – செல்வராசு – சிபிஐ

1998 – செல்வராசு – சிபிஐ

1999 – ஏ. கே. எஸ். விஜயன் – திமுக

2004 – ஏ. கே. எஸ். விஜயன் – திமுக

2009 – ஏ. கே. எஸ். விஜயன் – திமுக

2014 – கோபால் – அதிமுக

2019- கம்யூனிஸ்ட்டை சேர்ந்த ம. செல்வராசு வெற்றி

பாராளுமன்ற தொகுதியின் முக்கிய பிரச்னைகள்:

குடிநீர் பிரச்சனை
விவசாயிகளின் காவிரி நீர் பிரச்சனை, கடலில் வீணாக கலக்கும் தண்ணீரை கொள்ளிடம் கடைமடை பகுதியில் தடுப்பணை கட்டுவதற்கான திட்டம்:

நாகூர் திட்டச்சேரி திருமருகல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியால் பாதிப்பு

நாகை தஞ்சை தேசிய நெடுஞ்சாலை கிடப்பில் போடப்பட்ட திட்டம்:

வேதாரண்யத்தில் உற்பத்தி செய்யப்படும் உப்பை சர்வதேச அளவில் கொண்டு செல்வதற்கு ரயில் பாதை பல ஆண்டுகளாக அமைக்காதது:

தொன்மை வாய்ந்த நாகை துறைமுகம்ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் கிடப்பில் போடப்பட்ட திட்டம்:

இலங்கை மற்றும் தமிழக மீனவர்கள் பிரச்சனை:

விவசாயிகளுக்காக வேளாண் பல்கலைக்கழகம் திட்டம்:

கீழ்வேளூர் பேருந்து நிலையம்.

நாகப்பட்டினம் பாராளுமன்ற தொகுதி வாக்காளர் விபரம்:

நாகப்பட்டினம்: ஆண் வாக்காளர்கள் – 91,422 , பெண் வாக்காளர்கள் – 96,390,இதர வாக்காளர்கள் – 5, மொத்த வாக்காளர்கள்: 187817

கீழ்வேளூர்: ஆண் வாக்காளர்கள் – 82,966 , பெண் வாக்காளர்கள் – 85,710,இதர வாக்காளர்கள் – 2, மொத்த வாக்காளர்கள்: 168678

வேதாரண்யம்:ஆண் வாக்காளர்கள்- 90,228 , பெண் வாக்காளர்கள் – 92,731,இதர வாக்காளர்கள் – 0, மொத்த வாக்காளர்கள்: 182959

திருத்துறைப்பூண்டி : ஆண் வாக்காளர்கள் – 113015, பெண் வாக்காளர்கள் – 115652,இதர வாக்காளர்கள் – 1, மொத்த வாக்காளர்கள் – 228668,

திருவாரூர்: ஆண் வாக்காளர்கள் – 130716, பெண் வாக்காளர்கள் – 135421,இதர வாக்காளர்கள் – 22, மொத்த வாக்காளர்கள் – 266159.

நன்னிலம்: ஆண் வாக்காளர்கள் – 130379, பெண் வாக்காளர்கள் – 127991,இதர வாக்காளர்கள் – 7, மொத்த வாக்காளர்கள் -258377.

ஆண்-638726 பெண்-653895 மூன்றாம் பாலினம்-37 மொத்தம்-1292658

அக்கரைபேட்டை கிராமத்திற்கு இதுவரை எந்தவித கட்டமைப்பு வசதிகளை யாரும் செய்து தரவில்லை என அவ்வூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இயற்கை சீற்றங்களினால் மீனவர்களும் விவசாயிகளும் கூலித் தொழிலாளர்களும் பாதிக்கப்படும் பொழுது கொடுத்த வாக்குறுதியில் தொழிற்சாலைகள் கொண்டு வராததன் காரணமாக மாற்று தொழிலுக்கு வழியில்லாமல் இளைஞர்களும் இன்னலுக்கு ஆளாகி வருவதாக தொகுதி மக்கள் கூறுகின்றனர்.

தொன்மை வாய்ந்த நாகை துறைமுகம்கிடப்பில் போடப்பட்டதால் வர்த்தகர்களும் தொழிலாளர்களும் திருப்பூர் கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மும்மதங்கள் சங்கமிக்கும் நாகை சிக்கல் சிங்காரவேலர் கோவில், நாகூர் தர்கா, வேளாங்கண்ணி மாதா கோவில் உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களை மேம்படுத்த தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும்அப்பகுதி மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மீனவர்களுக்கு தனி அமைச்சகம், காவிரி விவகாரத்தில் விவசாயிகளுக்கான தீர்வு, பொதுமக்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தியும், தமிழக எல்லையில் அமைந்துள்ள காரைக்கால் தனியார் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரியை தடை விதிக்க நடவடிக்கை எடுக்க வாக்குறுதி தரும் வேட்பாளருக்கே இம்முறை வாக்களிக்க இருப்பதாக பாராளுமன்ற தொகுதி மக்களின் கருத்தாக உள்ளது.

2024இல்
இ.கம்யூனிஸ்ட்- செல்வராஜ்

பாஜக- ரமேஷ்

அதிமுக- சுர்ஜித் சங்கர்
போட்டியிடுகிறார்கள்.