காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

மனித கழிவுகளை மனிதனே அள்ளும் நடைமுறை ஒழிக்கப்படும்

“பழகுநர் பயிற்சி மேற்கொள்ள இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் தொகை வழங்கப்படும்”

‘டிப்ளமோ முடித்த இளைஞர்களுக்கு பொதுத் துறையில் தொழில் பழகுநர் பயிற்சி வழங்கப்படும்”

“ராணுவத்தில் ஆள் சேர்க்க பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்ட அக்னிபாத் திட்டம் ரத்து செய்யப்படும்”

“மத்திய அரசு பணிகளில் 50 சதவீதம் பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்

மாநில அரசுகளுக்கான நிதிப்பகிர்வை வழங்க புதிய கொள்கை வகுத்தல்

அண்டை நாடுகளால் இந்திய மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுவதைத் தடுக்க புதிய வழிமுறை

செஸ் வரி வசூலில் மாநிலங்களை ஏமாற்றும் பாஜகவின் சட்டத்திற்கு முற்றுப்புள்ளி

மாநிலங்களுக்கு அதன் உரிமைத்தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்

பண மதிப்பிழப்பு, ரஃபேல் ஒப்பந்தம், பெகாசஸ் உளவு, தேர்தல் பத்திர விவகாரம் குறித்து விசாரணை

அனைத்து வகையான மருத்துவமனைகளிலும் இலவச சிகிச்சை உறுதி செய்யப்படும்