அண்ணாமலை

பாரிவேந்தருக்காக பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

ஒட்டு மொத்த தமிழகமும் பெரம்பலூர் உன்னிப்பாக உற்று நோக்கியுள்ளது. காரணம் தமிழகத்தின் கல்வி வள்ளலான பாரிவேந்தர் பெரம்பலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் தாமரை சின்னத்தில் போட்டியிடுகிறார்.

இதற்காக பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியான முசிறி, குளித்தலை, துறையூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், பெரம்பலூரில் முகாமிட்டு கூட்டணி கட்சியினரின் உதவியுடன் இரவு பகல் பாராமல் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனார்.

ஏற்கனவே தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றியதுடன், தான் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 1200 மாணவர்களுக்கு கட்டணமில்லா கல்வி தொடரும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 1500 ஏழை குடும்பங்களுக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார். இந்நிலையில் பாரிவேந்தருக்கு ஆதரவாக பெரம்பலூரில் பாஜக தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஐஜேகே நிறுவனர் டாக்டர் பாரிவேந்தார், பாஜக தலைவர் அண்ணாமலை காண ஆயிரகணக்கான மக்கள் குழுமி இருந்தனர்.

பெரம்பலூர் காமராஜர் வளைவு பகுதியில் டாக்டர் பாரிவேந்தரை ஆதரித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரித்தார்.

முன்னதாக பெரம்பலூர் நான்கு ரோடு,பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் வழியாக கூட்டணி கட்சி தொண்டர்களின் இருசக்கர வாகனங்கள் புடைசூழ ஊர்வலமாக வந்து வாக்கு சேகரித்தார். பிரச்சார வாகனத்தில் பாஜக தலைவர் அண்ணாமலை, ஜஜே கே வேட்பாளர் பாரிவேந்தர் உள்ளிட்டோர் ஒரு சேர பிரச்சார வாகனத்தில் ஏறி ஊர்வலமாக வந்தனர். பெரம்பலூரில் பாரிவேந்தருக்கு ஆதரவு திரட்டி பாஜக தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அண்ணாமலை,
பாரிவேந்தரின் கனவான பெரம்பலூர் ரயில் திட்டம் கண்டிப்பாக கொண்டுவரப்படும் அதற்கான ஆரம்ப கட்டப்பணிகள் நடந்து கொண்டிருக்கிறது என கூறினார்.

நேர்மையால் உண்மையால் மக்கள் சிந்தனையால் உழைத்து முன்னுக்கு வந்தவர் பாரிவேந்தர் என புகழாரம் சூட்டினார். அவர் சம்பாதித்த பணத்தை தொகுதிமக்களுக்கு செலவழித்து வருவது பெருமையாக இருப்பதாக குறிப்பிட்டார். இம்முறை பாரிவேந்தர் வெற்றிபெற்றால் 1500 ஏழை குடும்பங்களுக்கு இலவச சிகிச்சை கொடுக்கும் பொறுப்பை ஏற்க உள்ளார் என கூறினார். மோடி குஜராத் முதல்வராக இருந்த போது அவரை முதன்முதலாக தமிழகத்திற்கு அழைத்து வந்தவர் பாரிவேந்தர் என சுட்டி காட்டிய அண்ணாமலை பாரிவேந்தருக்காக பிரதமர் மோடி பெரம்பலூர் வர வாய்ப்புள்ளதாக தெரிவித்தார்.

தாமரை சின்னத்தில் நிற்கும் பாரிவேந்தர் வெற்றிக்காக, ஒவ்வொரு பாஜக நிர்வாகியும் தொண்டனும் அடுத்த 20 நாளைக்கு உயிரைக்கொடுத்து வேலை பார்க்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார். பெண்களை அவமானப்படுத்தும் திமுகவின் வேட்பாளர்கள் நமக்குவேண்டாம் எனவும் உண்மையான மனிதர் பாரிவேந்தரை வெற்றிபெறச்செய்வது நமது கடமை என்று அண்ணாமலை பேசினார்