பாஜகவை குழி தோண்டி புதைக்கும் அண்ணாமலை

தமிழ்நாட்டில் பாஜகவை குழி தோண்டி புதைக்கும் வேலையை அண்ணாமலை செய்து வருகிறார் அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி தெரிவித்துள்ளார்.

பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த தடா பெரியசாமி சென்னையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது, பாஜகவில் பட்டியலின நிர்வாகிகள் புறக்கணிக்கப்படுவதாகவும், பாஜகவிலும் அங்கீகாரம் இல்லை; தலைமையும் கண்டு கொள்வது இல்லை என்று அவர் குற்றச்சாட்டினார்