தடா பெரியசாமி சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
திருமாவளவனுக்கு ஆதரவாக பாஜக செயல்படுவதாக தடா பெரியசாமி சரமாரியாக குற்றம்சாட்டியுள்ளார்.
பாஜகவில் பட்டியலின அணி மாநிலத் தலைவராக பதவி வகிப்பவர் தடா பெரியசாமி. முரசொலி பஞ்சமி நில விவகாரம் தொடர்பாக திமுக மீதும் மற்றும் விசிகவுக்கு எதிராகவும் தடா பெரியசாமி கடந்த காலங்களில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். வரும் மக்களவைத் தேர்தல் தனது சொந்த தொகுதியான சிதம்பரத்தில் பாஜக சார்பில் போட்டியிட சீட் கேட்டிருந்தார்.
ஆனால் சிதம்பரம் தொகுதியில் பாஜக வேட்பாளராக வேலூர் முன்னாள் மேயர் கார்த்தியாயினி போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது. தனக்கு வாய்ப்பு வழங்காததால் அதிருப்தியில் இருந்த தடா பெரியசாமி, பாஜகவில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இன்று இணைந்தார். மேலும் பாஜக மீது சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.