தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலி
புனித வெள்ளியை முன்னிட்டு கிறிஸ்தவ தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலி உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன.
மனித குலத்தை பாவங்களில் இருந்து மீட்டு இரட்சிப்பதற்காக அவதரித்ததாக நம்பப்படும் இயேசு பிரான், சிலுவையில் அறையப்பட்ட நாள் இன்று.
இயேசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு மரணித்த நாளாக இருப்பினும் இதனை கிறிஸ்தவப் பெருமக்கள் புனித வெள்ளியாக கடைபிடிக்கின்றனர்.
பெரிய வியாழனில் இருந்து துக்க காலம் தொடங்கி ஈஸ்டர் தினம் – அதாவது இயேசு பிரான் மீண்டும் உயிர்த்தெழுந்த காலம் வரை நீடிக்கும்.