தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதி!
தமிழகத்தில் 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு அனுமதி!
தமிழகத்தில் இதுவரை 29 கட்சிகளை சேர்ந்த 640 நட்சத்திரப் பேச்சாளர்களுக்கு தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
மக்களவைத் தேர்தல் முதல்கட்ட வாக்குப்பதிவில் தமிழகத்துக்கு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் பிரசாரத்துக்கு படையெடுத்துள்ளனர்.
தேர்தல் பிரசாரத்துக்காக அரசியல் கட்சிகள் அளிக்கும் நட்சத்திரப் பேச்சாளர்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் அங்கீகரித்து வருகின்றது.
தமிழகத்தில் திமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் தங்கள் கட்சிகளின் 40 நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலை தேர்தல் ஆணையத்திடம் வழங்கி ஒப்புதல் பெற்றுள்ளது.
திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், உதயநிதி ஸ்டாலின், மாநிலங்களவை எம்பி திருச்சி சிவா உள்ளிட்டோரின் பெயர் இடம்பெற்றுள்ளது.
பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில், பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, கட்சியின் தேசிய தலைவர் நட்டா, உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்டோரின் பெயர்கள் இடம்பெற்றுள்ளது.
மேலும், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோரின் பெயரும் இடம்பெற்றுள்ளது