தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாகு
இறுதி வாக்காளர் பட்டியலின் படி தமிழகத்தில் 6.18 கோடி வாக்காளர்கள் இருந்தனர். தற்போது 3.06 கோடி ஆண்கள், 3.16 கோடி பெண்கள், என 6.23 கோடி வாக்காளர்கள் உள்ளனர்.
இதுவரை 68,144 வாக்கு மையங்கள் இருக்கும் சூழலில், தற்போது கூடுதலாக177 வாக்குச்சாவடிகளை அமைக்கத் தேர்தல் ஆணையத்தின் சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.
85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 6.13 லட்சம் பேர் உள்ளனர். தேர்தல் நடத்தும் பணியில் மொத்தம் 4 லட்சம் பணியாளர்கள் ஈடுபட உள்ளனர்.
39 பொது பார்வையாளர்கள், 20 காவல் பார்வையாளர்கள், 58 செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நேற்றுவரை ₹68 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்திய பிரதாசாகு