இந்திய தேர்தல் ஆணையம்

  1. பாஜக வுடன் டி.டி.வி. தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் தேர்தல் கூட்டணி ஒப்பந்தம் செய்த அன்றே அக்கட்சிக்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்து தேர்தல் ஆணையம் ஆணை.
  2. பாஜக வுடன் டாக்டர் ராமதாசின் பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் கூட்டணி அமைத்து ஒப்பந்தம் செய்த அன்றே அக்கட்சிக்கு மாம்பழம் சின்னம் தேர்தல் ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
  3. பாஜக கூட்டணியில் இடம் பெற்றுள்ள ஜி.கே. வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு சைக்கிள் சின்னம் ஒதுக்கீடு.
  4. நடிகர் சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னம் கேட்டு உச்ச நீதிமன்றம் வரை சென்றும் மறுப்பு.
  5. தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள வை.கோ. வின் ம.தி.மு.க. வுக்கு பம்பரம் சின்னம் கேட்டு இதுவரை வழங்கப்படாத நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அதற்காக வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது.
  6. தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றுள்ள திருமாவளவனின் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் கேட்டு இதுவரை ஒதுக்கீடு செய்யப்படாமல் இழுத்தடிப்பு.

இதிலிருந்து சகலமானவர்களுக்கும் தெரிவித்துக் கொள்வது என்னவென்றால், இந்திய தேர்தல் ஆணையம் என்பது மிகவும் நேர்மையாக நடுநிலையோடு நடந்து கொள்கிறது.