நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து
பாஜக கூட்டணியில் உள்ள புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து!!
புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகத்திற்கு தொலைபேசியில் நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக புதிய நீதிக் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“புதிய நீதிக்கட்சியின் நிறுவனர் தலைவர் டாக்டர் ஏ.சி.சண்முகம் அவர்கள் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணியில் தாமரைச் சின்னத்தில் பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளராக டெல்லி தலைமையில் அறிவித்தபின் மாண்புமிகு மத்திய நிதி அமைச்சர் திருமதி. நிர்மலா சீத்தாராமன் அவர்களும்,
முன்னாள் கவர்னர், திருமதி தமிழிசை சௌந்தரராஜன், அரவிநத் ரெட்டி, தமிழ் நாடு பாரதிய ஜனதா கட்சி பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி, தமிழ்நாடு பாரதிய ஜனதா கட்சி தலைவர் திரு. அண்ணாமலை,
தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் திரு. ஜி.கே. வாசன் மற்றும் தமிழ் திரைப்பட நடிகர் சூப்பர் ஸ்டார் பத்மஸ்ரீ ரஜினிகாந்த் அவர்களும் தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்தனர்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது