உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை

பொன்முடி வழக்கில் ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை !
ஆளுநர் தன் முடிவை அறிவிக்காவிடில் எங்கள் நடவடிக்கை என்ன என்பதை தற்போது நாங்கள் கூறப்போவதில்லை!
பொன்முடி வழக்கில் ஆளுநர் ரவிக்கு உச்சநீதிமன்றம் எச்சரிக்கை

“பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பதற்கு ஆளுநருக்கு அதிகாரம் அளித்தது யார்?”

பொன்முடிக்கு பதவிப் பிரமானம் செய்து வைப்பது தொடர்பான வழக்கில் பதிலளிக்க ஆளுநர் ரவிக்கு நாளை வரை கெடு

இல்லையென்றால்.. நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை – உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எச்சரிக்கை

ஆளுநர் ரவிக்கு 3வது முறையாக உச்சநீதிமன்றம் கண்டனம்!

ஆளுநர் என்ன செய்து கொண்டிருக்கிறார்? உயர் நீதிமன்ற தீர்ப்புக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்? நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனக் கூறமுடியும்?

தான் என்ன செய்கிறோம் என்று அவருக்கு தெரியாதா?”

ஒருவரை அமைச்சராக நியமிக்க வேண்டும் என முதலமைச்சர் கூறினால், ஜனநாயக முறைப்படியே ஆளுநர் செயல்பட வேண்டும்.

அந்த நபர்/ அமைச்சர் குறித்து எனக்கு மாறுபட்ட கண்ணோட்டங்கள் இருக்கலாம். ஆனால், அரசியல் சாசனப்படியே நாம் செயல்பட வேண்டும்.

ஆளுநர் மாநிலத்தின் சம்பிரதாய தலைவர் மட்டுமே…