ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வரும்

“உச்சநீதிமன்றம் தடை விதித்த பிறகும் பொன்முடிக்கு பதவியேற்பு நடத்தி வைக்க ஆளுநர் மறுப்பது ஏன்?

நீதிமன்ற உத்தரவை மீறி எவ்வாறு பதவிப்பிரமாணம் செய்ய முடியாது எனக் கூறமுடியும்.

ஆளுநர் மீது நடவடிக்கை எடுக்க நேரிடும்!”

பொன்முடிக்கு பதவிப் பிரமானம் செய்து வைப்பது தொடர்பாக முடிவெடுக்க ஆளுநர் ரவிக்கு நாளை வரை கெடு விதிக்கிறோம்.

நாளைக்குள் முடிவு எடுக்கவில்லை என்றால்..
நாங்கள் அதை இப்போது சொல்லப் போவதில்லை

முதலமைச்சர் பரிந்துரையை ஆளுநர் நிராகரிக்கிறாரா?

இந்த விவகாரத்தில் ஆளுநருக்கு ஆலோசனை கூறுங்கள். இல்லையேல், கடுமையான கருத்துகளை பதிவு செய்ய வேண்டியது வரும்

பொன்முடி விவகாரத்தில் முடிவெடுக்க நாளை வரை ஆளுநருக்கு அவகாசம் வழங்குகிறோம்

இல்லையேல் நாங்கள் ஆளுநருக்கு உத்தரவு பிறப்பிக்க நேரிடும்”

பொன்முடிக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுத்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்றம் கருத்து