மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி..

தேர்தல் பத்திரம்.. “உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம்: *மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேட்டி..

தேர்தல் பத்திரம் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா; தேர்தல் பத்திரம் தொடர்பான உச்சநீதிமன்றத்தின் உத்தரவை மதிக்கிறோம்; தேர்தல் பத்திரம் ஒழிக்கப்பட்டதால் கறுப்புப் பணம் திரும்ப வரும் என்பது என் தனிப்பட்ட கருத்து; கடந்த 10 ஆண்டுகால பிரதமர் மோடியின் ஆட்சியை வரலாற்றில் பொன் எழுத்துகளால் எழுத வேண்டும்

400க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும். குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பலரும் விமர்சிக்கிறார்கள். உலகின் பல நாடுகளில் இதுபோன்ற முறை நடைமுறையில் இருக்கிறது. மோடி தலைமையிலான பாஜக ஆட்சியில் கடந்த 10 ஆண்டுகளில் காஷ்மீர், இடதுசாரி தீவிரவாதம் மற்றும் வடகிழக்கில் வன்முறை 75 சதவீதம் குறைந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்த 10 ஆண்டுகளில் மட்டும் உலகின் 5வது பொருளாதார சக்தியாக இந்தியாவை அவர் மாற்றியுள்ளார் என்று அவர் கூறியுள்ளார்.