வசாயிகள் போராட்ட அறிவிப்பை அடுத்து ஒன்றிய அரசு முடிவு

பருப்பு வகைகளை குறைந்தபட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விலை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்ட அங்கீகாரம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட கோரிக்கைளை வலியுறுத்தி பஞ்சாப், அரியானா, உத்திரப் பிரதேச மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் கடந்த மாதம் மீண்டும் போராட்டத்தை தொடங்கின. டெல்லியின் எல்லைப் பகுதியில் திரண்ட விவசாயிகளால் பதட்டம் உருவான நிலையில் ஒன்றிய அரசு அவர்களுடன் 4கட்ட பேச்சுவார்த்தை நடத்தியது.

அதில் 5 ஆண்டுகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையில் பருத்தி, கோதுமை உள்ளிட்ட 5விளை பொருட்களை கொள்முதல் செய்ய ஒன்றிய அரசு உறுதியளித்தது. ஆனால் இதை ஏற்கமறுத்த விவசாயிகள் சட்ட அங்கீகாரம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தினர். மேலும் இந்த மாதம் 14ம் தேதி டெல்லி முற்றுகை போராட்டத்தை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளனர்.