ரூ.3 லட்சம் நிதியுதவி

கடலில் விழுந்து காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

கடலில் விழுந்து காணாமல் போன மீனவரின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார். கன்னியாகுமரி குளச்சல் அ கிராமத்தை சேர்ந்த முகைதீன் யாசர் அலி (32) அரபிக்கடலில் தவறி விழுந்து காணாமல் போனார். கடலில் விழுந்து காணாமல் போன மீனவரின் முகைதீன் யாசர் அலியின் குடும்பத்திற்கு முதலவர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.