கலங்கி சொன்ன தமிழிசை
“பெண் பிள்ளைகளை போல ஆண் பிள்ளைகளையும் கண்காணித்து வளர்க்க வேண்டும். அப்படி வளர்க்கப்படாத ஆண் பிள்ளைகள் தான், இதுபோல பாலியல் குற்றங்களில் ஈடுபடுகிறார்கள்” என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்
புதுச்சேரியில் சிறுமி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவத்தை சுட்டிக்காட்டி பேசிய அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் ஆண் குழந்தைகளை பெற்ற பெற்றோர்களுக்கு காட்டமாக அறிவுரை வழங்கியுள்ளார். மேலும், ஆண் குழந்தைகளை இப்படி வளர்க்காதீர்கள் என்றும் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்தார்.
புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டிற்கு முன் விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை, அதே பகுதியைச் சேர்ந்த 19 வயது இளைஞன் கஞ்சா போதையில் மொட்டை மாடிக்கு தூக்கிச் சென்று பலாத்காரம் செய்திருக்கிறான். அதை விட கொடுமை, இந்த சத்தத்தை கேட்டு அங்கு வந்த 57 வயது முதியவரும் அந்த சிறுமியை பலாத்காரம் செய்துள்ளான்.