இந்தியா மாஸ் வெற்றி
IND vs ENG: ‘112 வருசத்தில் முதல்முறை’.. இந்தியா மாஸ் வெற்றி: புது WTC புள்ளிப் பட்டியல் இதுதான் ஒரு இடத்தில் கூட, இங்கிலாந்து அணியை முன்னேற விடாமல், தொடர்ந்து அபாரமாக செயல்பட்ட இந்திய அணி, 5ஆவது டெஸ்டில் இன்னிங்ஸ் வெற்றியைப் பெற்றுள்ளது.
பேட்டிங்கிற்கு சாதகமான தர்மசாலா பிட்சில், டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணியை, இந்திய ஸ்பின்னர்கள் கதறவிட்டனர். குறிப்பாக, குல்தீப் யாதவ் 5 விக்கெட்களையும், அஸ்வின் 4 விக்கெட்களையும் கைப்பற்றி, இங்கிலாந்தை சுருட்டினர்.
பேட்டர்களுக்கு சாதகமான தர்மசாலா பிட்சில், முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 218 ரன்களை தான் அடித்தது. அந்த அணியில், ஓபனர் ஜாக் கிரோலி (79) மட்டுமே பெரிய ஸ்கோர் அடித்தார். மற்றவர்களில் யாரும் 30+ ரன்களை கூட தொடவில்லை.