நடிகர் கமல்ஹாசன் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் செர்பியா சென்று படப்பிடிப்பில் கலந்து கொள்ள இருந்த நிலையில் பயணத்தை ரத்து செய்துள்ளார்.
மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் படத்திற்காக கமல்ஹாசன் செர்பியா செல்ல இருந்தார். செர்பியா சென்றுள்ள மணிரத்னம் உட்பட தக் லைஃப் படக்குழு, கமல் அல்லாத காட்சிகளை படமாக்கி சென்னை திரும்ப உள்ளது.
திமுக கூட்டணியில் மக்கள் நீதி மய்யத்துக்கான தொகுதி பங்கீடு இன்னும் உறுதி செய்யப்படவில்லை. தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் நாள் முடியும் வரை வெளிநாட்டு பயணத்தை கமல்ஹாசன் ரத்து செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது