10, +2 துணைத் தேர்வு எழுதும் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

10, +2 துணைத் தேர்வு எழுதும் மாணவர்கள் விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்கி பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியானதில் இருந்து 7 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்ட நிலையில், தற்போது 15 நாட்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி மாணவர்கள், தட்கலில் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கட்டண சலுகையும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது

செய்திகள் : ராகுல்