பங்களா கட்டிய பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ் மீது வழக்கு

கொடைக்கானலில் அனுமதியின்றி பங்களா கட்டிய பாபி சிம்ஹா, பிரகாஷ்ராஜ் மீது வழக்கு

“கொடைக்கானலில் நடிகர்கள் பிரகாஷ்ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் கட்டிய கட்டுமானம் அனுமதியின்றி மேற்கொள்ளப்பட்டது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தமிழக அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டுமான பணிகளை நிறுத்த நோட்டீஸ் வழங்கப்பட்டு, தற்போது கட்டுமான பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. அனுமதியற்ற கட்டுமானம் மீது உள்ளூர் திட்டக்குழுமம் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள உள்ளது. கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் பிரகாஷ் ராஜ், பாபி சிம்ஹா ஆகியோர் சொந்தமாக பங்களா கட்டியுள்ளனர் அனுமதி பெறாமல் பங்களா கட்ட பாறைகளை அகற்றியதால் மண் சரிவு ஏற்படும் அபாயம் என வழக்கு பதிவு செய்யப்படடுள்ள நிலையில், இந்த வழக்கு விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு