வண்டலூர் அருகே திமுக நிர்வாகி ஆராமுதன் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
காட்டாங்குளத்தூர் வடக்கு ஒன்றிய திமுக செயலர் ஆராமுதன் கடந்த 29ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இந்நிலையில் வழக்கில் சம்மந்தப்பட்ட கனகராஜ், அருண்ராஜ், நவநீதகிருஷ்ணன், மணிகண்டன் ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.