நடிகர் அழகு (சண்டை கலைஞர்)

புதுக்கோட்டை பக்கத்துல கொளத்துப்பட்டி அப்டிங்கிற ஒரு சின்ன கிராமம்தான் நான் பிறந்த ஊர். சின்ன வயசுலயே அம்மாவும் அப்பாவும் இறந்துட்டாங்க. தாத்தா வீட்லதான் வளர்ந்தேன். 1969ல் வேலை தேடி சென்னைக்கு வந்தேன். சில சிரமங்களைத் தாண்டி பெரிய நிறுவனம் ஒண்ணுல வேலை கிடைச்சிது. ஆனாலும், தற்காப்புக் கலை மேல இருந்த ஆர்வத்துனால கோபாலன் குருவிடம் கராத்தே, களரி, சிலம்பம் கத்துக்கிட்டேன். அப்படி ஒருமுறை, எக்மோர்ல நடந்த தற்காப்புக் கலை நிகழ்ச்சியில் கலந்து, என் திறமையை வெளிப்படுத்தினேன். இரண்டு நாள்களுக்குப் பிறகு, சண்டை இயக்குநர் மாதவன் வழியா சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடி வந்துச்சு. எனக்கு ஒண்ணுமே புரியலை. ‘என் குருவிடம் பேசிட்டு சொல்லுறேன்’னு சொல்லிட்டேன். தேடி வந்த வாய்ப்பை பயன்படுத்திக்கச் சொல்லி கோபாலன் ஐயா சொன்னார். இப்படித்தான் சினிமா பயணம் தொடங்குச்சு.

1975-ல் வெளியான ‘துணிவே துணை’ என்னோட முதல் படம். ஹீரோ ஜெய்சங்கரோட சோலோ ஃபைட் சீன்ல நடிச்சேன். முதல் நாள் ஷூட். ஸ்டார்ட் கேமரா ஆக்‌ஷன்னு சொன்னதும் ஏதோ ஒரு வேகத்துல காலைத் தூக்கி ஜெய்சங்கர் சாரோட தலையில் அடிச்சிட்டேன். தலையில இருந்த விக் பறந்துடுச்சு. நல்ல வேலைக்கு அவர் குனிஞ்சிட்டார். இல்லைனா, தலையில பெருசா அடிபட்டிருக்கும். இயக்குநர் கொஞ்சம் கடுகடுப்பா பேசிட்டார். ஜெய்சங்கர் சார்தான் எல்லோரையும் சமாதானப்படுத்தினார்.

துணிவே துணை படத்தில் நடிகர் அழகின் பெயர்..துணிவே துணை படத்தில் நடிகர் அழகின் பெயர்..
என் முகம் வாடிப் போனதை கவனிச்சார். பக்கத்துல வந்து ”உங்க ஃபைட் வித்தியாசமா இருக்கு. நல்லா பண்றீங்க. சண்டைக் காட்சியில் நடிக்கும்போது, நீங்க அடிக்கிற மாதிரிதான் இருக்கணும். ஆனா அடிக்கக் கூடாது. கொஞ்சம் கன்ட்ரோல் இருக்கணும். இல்லாட்டி ஆளுக்கு ஒரு மருத்துவமனையில படுக்க வேண்டியதாகிடும்”னு பக்குவமா எடுத்துச்சொன்னார். அந்த வார்த்தைகள்தான், இத்தனை ஆண்டுகால சினிமா வாழ்க்கைக்கும் அர்த்தம். அந்தச் சம்பவத்துல ஜெய்சங்கர் கோவப்பட்டிருந்தா, அதுவே என் கடைசிப் படமாக இருந்திருக்கும். என் வாழ்க்கையில மறக்க முடியாத நபர். அந்த படத்தோட இன்னொரு சிறப்பு, தமிழ் சினிமாவிலேயே முதன்முறையா கராத்தே அந்தப் படத்தின் மூலமாதான் அறிமுகமாச்சு.

சினிமா வாழ்க்கை தொடங்கி 15 வருஷமா தொடர்ந்து ஸ்டன்ட் மேனா மட்டும்தான் நடிச்சிட்டு இருந்தேன். அப்போ, பொது இடங்களில் மக்கள் பார்க்குறப்போ, “பொறுக்கி, பொண்ணுங்க கையைப் புடிச்சி இழுக்குறவன், ரவுடி”னு திட்டுவாங்க. 1988ல் வெளியான செந்தூரப்பூவே’, என் வாழ்க்கையில திருப்புமுனையா அமைஞ்ச படம். அதன்பிறகு,செந்தூரப் பூவே படத்தில் நடிச்சவர் இவர்தான்’னு மக்கள் சொல்லத் தொடங்குனாங்க. ‘நடிச்சவர்’ அப்டிங்கிற வார்த்தையைக் கேட்டதும் நூறுபேரை தூக்கிப்போட்டு அடிச்ச மாதிரி ஒரு எனர்ஜி.

நடிகர் அழகுநடிகர் அழகு
கமல் சாரோட நடிச்ச அதிர்ஷ்டம், இந்தி படத்துலயும் நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. கைதியின் டைரி' படத்தை இந்தியில்ஆக்ரி ராஸ்தா’ங்கிற பெயர்ல ரீமேக் செய்தாங்க. அதுனால, அமிதாப் பச்சனோட நடிச்சேன். இப்படி, தமிழ், தெலுங்கு, மலையாளம், ஒரியா மற்றும் ஒரு ஆங்கிலப் படம்கூட நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. ஸ்டன்ட் மேனாக இருந்தாலும், ஹீரோவுக்கு டூப் போட்டது இரண்டு படங்கள்ல மட்டுமே. அதுவும் சிவாஜி அண்ணனுக்குதான். ’நான் பிறந்த மண்’ மற்றும் ‘தியாகம்’ இரண்டுமே மறக்க முடியாத படங்கள். நான் பிறந்த மண் படத்துக்காக ஒரு சண்டைக் காட்சியில சிவாஜி அண்ணணுக்கு டூப் போட்டேன்.

சண்டையில வில்லன் நடிகர் ஜஸ்டினைக் கொஞ்சம் பலமா தாக்கிட்டேன். அவருக்கு மூக்குல ரத்தம் ஊத்திடுச்சு. பார்த்து வியந்த வில்லன் நடிகரையே காயப்படுத்திட்டோமேனு குற்ற உணர்வுல கூனிக் குருகிட்டேன். சிவாஜி அண்ணன் கூப்பிட்டு, ‘ இதெல்லாம் சகஜம், வருத்தப்படக்கூடாது. நீதான் இந்தப் படத்துல எனக்கு டூப் போடணும், அதுல எந்த மாற்றமும் கிடையாது. கொஞ்சம் கவனமாக நடி’’னு ஆறுதல் சொன்னார். ஒவ்வொரு நாள் படப்பிடிப்புலயும், கூடியிருக்கும் ரசிகர்களோடு ஒருத்தனா, சிவாஜி அண்ணனைப் பார்த்து பிரமிச்சி ரசிப்பேன். திடீர்னு கூப்பிட்டு என்னைப் பத்தி விசாரிச்சார். “நல்லா ஃபைட் பண்ற’’னு பாராட்டினார். உடனே அவர் காலைத் தொட்டு வணங்கினேன்.

நடிகர் அழகுநடிகர் அழகு
சண்டைக் காட்சிகளில் நடிக்கும்போது விபத்துகள் நடக்குறது சகஜம். ஸ்டன்ட் யூனியனில் நிறைய பேர் இறந்துகூட போயிருக்காங்க. ஆபத்துனு தெரிஞ்சுதான் நடிக்கிறோம். கண்ணாடியை உடைக்கிற காட்சின்னாகூட ஆக்‌ஷன் சொல்லுற வரைக்கும் பயமா இருக்கும். ஆக்‌ஷன் சொன்னதும் ஒரு தைரியம் வரும். அதுக்கு அப்புறம் அடிதூள்! உயரத்துல இருந்து குதிக்கும்போது சரியா போர்டுல குதிக்கணும். கொஞ்சம் மிஸ்ஸாச்சுனாகூட ஆள் காலிதான். கமல் சாரோட எனக்குள் ஒருவன்’,சத்யா’ படங்களில் நடிக்கும்போது, பால்கனி, உயரமான கட்டடங்களில் இருந்து குதிக்கும் காட்சிகள்ள நடிக்கும்போதெல்லாம் அடிபடலை. ஆனா, ஒரு முறை ஏழு அடியில் இருந்து விழும்போது பெரிய காயத்தோட அடிபட்டுடுச்சு. எப்போ என்ன நடக்கும்னு தெரியாது. அப்படி ரிஸ்க் எடுக்கதான் பிடிச்சிருக்கு.

எப்போதுமே எம்.ஜி.ஆர் ரசிகன் நான். இப்போ இருக்குற நடிகர்களில் தனுஷை ரொம்பப் பிடிக்கும். ‘வேங்கை’ படத்தைத் தொடர்ந்து, ‘பட்டாசு’ படத்துலையும் நடிச்சிருக்கேன். அவரோட உருவத்துக்கும் திறமைக்கும் சம்பந்தம் இருக்காது. தனுஷ் சில நேரங்களில் கமலை நினைவுபடுத்துவார்.

சத்யா படத்தில் தாடியுடன் கமல்சத்யா படத்தில் தாடியுடன் கமல்
பாக்யராஜ் சாரோட `சின்னவீடு’ படத்துல நடிச்சிட்டு இருந்த நேரம் அது. ‘குமுதம் பார்த்தீங்களா’னு பாக்யராஜ் சார் கேட்டார். வாங்கி பார்த்துட்டு நெகிழ்ந்திட்டேன். கமல்சாரோட பேட்டி புத்தகத்துல இருந்துச்சு. பேட்டியில் ‘ஏன் தாடி வச்சி நடிக்கிறீங்க’ங்கிற கேள்விக்கு, ‘நடிகர் அழகு எப்போதுமே தாடியோடதான் இருப்பார். அவரை மாதிரி தாடியோடு நடிக்கணும்னு ஆசை. அதுனால, தொடர்ச்சியா நடிக்கிறேன்’னு சொல்லியிருந்தார். இப்படியான அனுபவங்கள் யாருக்குமே கிடைக்காது.

இப்படி, ரஜினி சாரோடு ‘ராணுவ வீரன்’ படத்துல சண்டைக் காட்சியில் நடிக்கும்போது, ஃபயர் சீன்ல டூப் போட்டேன். பாதுகாப்பு உடையோட தயாரா இருந்தேன். ஆக்‌ஷன் சொன்னதும் நெருப்பு வைச்சாங்க. தீ பத்தலைனு பெட்ரோலை அதிகமா ஊத்தி எரிய விட்டுட்டாங்க. அந்த ஃபயர் ப்ரூஃப் உடை எப்படியும் 8 கிலோ இருக்கும். அதையும் தாண்டி தீ தலைக்கு மேலே எறிய ஆரம்பிச்சுடுச்சு. உள்ளுக்குள்ள புகை சூழ, மூச்சு விடமுடியலை. தீ அணைப்பு வண்டி தயாரா இருந்துச்சு. உடனே குப்புறப் படுத்து கை, கால்களை அசைச்சேன். தீயை அணைக்க முயற்சி செய்தாங்க. ஆனாலும், தீ கட்டுக்குள் வரலை. இதோட என் கதை முடிஞ்சதுனு நினைச்சேன்.

நடிகர் அழகுநடிகர் அழகு
என் குடும்பம் என்னாகும்னுதான் மனசுக்குள்ள ஓடுச்சு. ஒரு வேகத்துல, தலையில இருந்த ஆடையை கிழிச்சி தூர வீசிட்டு, அங்க இருந்தவர்களை ஆக்ரோஷமா திட்டினேன். அதன்பிறகு தான் தெரிஞ்சது, எனக்கு ஃபயர் ப்ரூப் உடையைப் போட்டு விட்டவர், உள்பக்கம் வரவேண்டியதை முன்பக்கம் வர்ர மாதிரி அணிவிச்சிருக்கார்னு. இன்னும் கொஞ்சம் போயிருந்தால், அன்னிக்கே என் கதை முடிஞ்சிருக்கும்.

ஸ்பாட்டில் ரஜினி சார் இல்லை. மறுநாள் ஷூட்டுக்கு வந்ததும், தகவல் தெரிஞ்சிகிட்டு உரிமையா கண்டிச்சார். ‘ என்ன அழகு நீங்க. ஃபயர் காட்சிகள்ல ஏன் நடிக்குறீங்க. உன்னை நம்பி குடும்பம் இருக்கு. இனி இந்த ரிஸ்கை எடுக்காதீங்க’னு சொன்னார். ரஜினியும் கமலும் எப்போதுமே எனக்கு ஸ்பெஷல் தான்.

நடிகர் அழகுநடிகர் அழகு
தற்காப்புக் கலைகள் முறையா கற்கலைனாலும், விஜயகாந்த் சார் நேர்த்தியா நடிப்பார். ‘சிறையில் பூத்த சின்ன மலர்கள்’, ‘செந்தூரப் பூவே’ போன்ற படங்களில் அவரோட நடிச்சது மறக்க முடியாது. சண்டைக் காட்சிகளில் சம்மர் ஷாட் சர்வ சாதாரணமாக அடிப்பார். ஸ்பின் கிக் அவரை மாதிரி யாராலும் செய்ய முடியாது. அதுமாதிரி, மோகன்லால் சாரோடவும் வொர்க் பண்ணியிருக்கேன். ரொம்ப ஃபிட்டா இருப்பார். சண்டைக் காட்சியில பிடிச்சுத் தள்ளும்போதுதான், அவரோட வலு தெரிஞ்சது. எப்போதுமே உடற்பயிற்சி செய்துட்டே இருப்பார். இப்படி, ஒவ்வொரு நடிகர்களோட நடிக்கிறதுமே ஒரு பாடம்தான். நிறைய கத்துக்கிட்டேன்.” என்று முடித்தார்.

ரெட்ரோ காலக்கட்டத்தில், திரையில் ஸ்டன்டு மேனாக மிரட்டிய அழகுக்கு 70 வயதாகிவிட்டது. இன்னும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

பதிவு:எஸ்ஜிஎஸ் கம்பளை