டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில்
அமலாக்கத்துறை சம்மனுக்கு மார்ச் 12-க்கு பிறகு காணொலி மூலம் ஆஜராகத் தயார் என டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதில் அளித்துள்ளார். டெல்லியில் கடந்த 2021ம் ஆண்டு வகுக்கப்பட்ட மதுபான கொள்கை முடிவுகளில் தனியாருக்கு லாபம் ஏற்படும் வகையில் அரசு செயல்பட்டதாகவும் இதனால் அரசுக்கு அதிகளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டதாகவும் டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா அளித்த புகாரில் சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. மேலும், இதே வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் அமலாக்கத்துறை ஏற்கனவே 7 முறை சம்மன் அனுப்பியது. ஆனால் 7 முறையும் அரவிந்த் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
அதில், வரும் 12ம் தேதிக்கு மேல் சமமனுக்கு பதிலளிக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார். வீடியோ கான்பரன்சிங் மூலம் அமலாக்கத்துறை முன் கெஜ்ரிவால் ஆஜராக உள்ளதாகவும் ஆம் ஆத்மி வட்டாரங்கள் கூறுகின்றன.