சென்னையில் போக்குவரத்து மாற்றம்
பிரதமர் மோடி இன்று சென்னை வருவதை முன்னிட்டு நகரில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இன்று மாலை 5 மணியளவில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி சென்னை வருகிறார். இதையொட்டி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அதன்படி அண்ணா சாலையில், நந்தனம் ஒய்.எம்.சி.ஏ முதல் அண்ணா மேம்பாலம் வரை, மதியம் 12 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதாக வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.