சென்னையில் தனியார் பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல்

: சென்னை மாங்காடு அருகே கெருகம்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளிக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மின்னஞ்சலில் வந்த வெடிகுண்டு மிரட்டலையடுத்து மாணவர்கள் வெளியேற்றப்பட்டு பள்ளியில் போலீஸ் சோதனை நடத்தி வருகின்றனர்.

கெருகம்பாக்கத்தில் தனியாருக்கு சொந்தமான பள்ளியில் வெடிகுண்டு இருப்பதாக இமெயிலுக்கு குறுந்தகவல் வந்தது. பள்ளி நிர்வாகம் மாங்காடு போலீசில் அளித்த புகாரை அடுத்து மோப்ப நாய் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்து வருகின்றனர். கடந்த 1ம் தேதி மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்த நிலையில் இன்று மீண்டும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.