சீமானின் வலதுகரமே இவர்தான்

மான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி தேர்தல் அரசியலில் 2016 சட்டமன்றத் தேர்தல் முதல் இயங்கி வருகிறது. அது முதல் 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என அனைத்திலும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிட்டு வருகிறது.

அதுபோலவே வரும் மக்களவைத் தேர்தலிலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி என நாற்பது தொகுதிகளிலும் தனித்துப் போட்டி என சீமான் அறிவித்துவிட்டார். மற்ற கட்சிகளையும் முந்திக்கொண்டு வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டார். கடந்த தேர்தல்களில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிட்ட நிலையில், தற்போது அந்த சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய சின்னத்தில் களமிறங்க வேண்டிய சூழல் நாம் தமிழருக்கு உருவாகியுள்ளது.