ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என அறிவிப்பு
பிரதமர் மோடி சென்னையில் பங்கேற்கும் பாஜக பொது கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்லடம், திருநெல்வேலி பொது கூட்டத்திற்கு அழைக்காத நிலையில் இன்றைய கூட்டத்திலும் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை. தமிழகத்தில் பல்லடம், திருநெல்வேலியில் பிரதமர் மோடி கடந்த மாதம் பங்கேற்ற பாஜக பொதுக்கூட்டத்தில், கூட்டணி கட்சி தலைவர்கள் மட்டுமே மேடையில் பங்கேற்றனர். குறிப்பாக தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் ஜான் பாண்டியன், புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர் ஆகியோர் மட்டுமே பங்கேற்றிருந்தனர்.
இன்றைய பாஜக பொதுக்கூட்டத்தில் பன்னீர்செல்வத்துக்கு அழைப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஓபிஎஸ் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.