போதை பொருள் விவகாரம்

டெல்லியில் கடந்த வாரம் 2000 கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சென்னையை சேர்ந்த திமுக அயலக அணி நிர்வாகி ஜாபர் சாதிக் என்பவர், இந்த போதை பொருள் கடத்தல் சம்பவத்தில் மூளையாக செயல்பட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில் ஜாபர் சாதிக் தலைமறைவானார். அவர் திமுகவில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் சென்னையின் பல்வேறு இடங்களிலும் சோதனை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள காம்டா நகர் சஹாரா எக்ஸ்பிரஸ் கூரியர் நிறுவனத்திலும் தேசிய போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர்.