டிடிவி தினகரன் வைத்த கோரிக்கை

அதிமுகவில் மக்களவை உறுப்பினர், பொருளாளர், துணை பொதுச் செயலாளராக இருந்தவர் டிடிவி தினகரன். 2017ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்றுகூடி தினகரனை கட்சியில் இருந்து நீக்கியது. ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சையாக நின்று வென்றார். இதனால் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை தொடங்கி நடத்தி வருகிறார். 2019 மக்களவைத் தேர்தல் மற்றும் 2021 சட்டமன்றத் தேர்தல்களில் தினகரன் கட்சி போட்டியிட்டது.

2021 சட்டமன்றத் தேர்தலில் அமமுக சார்பில் முதுகுளத்தூர் தொகுதியில் முருகன் என்பவர் போட்டியிட்டார். அவரை ஆதரித்து டிடிவி தினகரன் தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பத்து கார்கள், இருபது இரு சக்கர வாகனங்களுடன் பரப்புரை செய்தனர் என்றும், ஒலிப்பெருக்கி பயன்படுத்தியதோடு பட்டாசுகளை வெடித்தனர் என்றும் குற்றம்சாட்டப்பட்டது.இதுதொடர்பாக பொது மக்களுக்கு இடையூறு செய்து தேர்தல் விதிகளை மீறியதாக கமுதி காவல் நிலையத்தில் டிடிவி தினகரனுக்கு எதிராக தேர்தல் வழக்கு பதிவு செய்தனர்

நீதிபதி ஆனந்த் வெங்கடேசன் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், ஐ.பெரியசாமி, முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் பொன்முடி, வளர்மதி வழக்குகளை சூமோட்டோவாக மறு ஆய்வுக்கு எடுத்து அதிரடி காட்டியவர்.