அபுதாபி இந்து கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி

துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பா அருகே அமைந்துள்ள அபு முரீகாவில் 27 ஏக்கர் நிலப்பரப்பில் BAPS இந்து கோவில் கட்டப்பட்டது. சுமார் 900 கோடி ரூபாய் செலவில் இந்த கோவில் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கோவிலை பிரதமர் மோடி கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி திறந்து வைத்தார்.

ராஜஸ்தானின் இளஞ்சிவப்பு கற்கள், இத்தாலி மார்பிள்ஸ் போன்றவற்றால் இந்த கற்கோவில் கட்டப்பட்டுள்ளது. 108 அடி உயரமும், 262 அடி நீளமும், 180 அடி அகலமும் கொண்டதாக 6 கோபுரங்களுடன் அழகிய கலை நயத்துடன் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளது. கடந்த 14 ஆம் தேதி பிரதமர் மோடியால் இந்த கோயில் திறக்கப்பட்ட நிலையில் கடந்த 15 ஆம் தேதி முதல் முன்பதிவு செய்த வெளிநாட்டு பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி.க்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.