வீல் சேர் கிடைக்காததால் பயணி மரணம்: ஏர் இந்தியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம்.

வீல் சேர் கிடைக்காததால், அமெரிக்காவில் இருந்து மும்பை வந்த 80 வயது முதியவர் உயிரிழந்த விவகாரத்தில் ஏர் இந்தியாவிற்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்து விமான போக்குவரத்து கண்காணிப்பு இயக்குநரகம் (டிஜிசிஏ) உத்தரவிட்டு உள்ளது.

கடந்த 12ம் தேதி அமெரிக்காவில் இருந்து வயதான முதிய தம்பதி மும்பை வந்தனர். இதற்காக டிக்கெட் முன்பதிவு செய்யும்போது வீல்சேர் வசதி தேவை எனக் கூறியிருந்தனர்.

மும்பை வந்ததும், போதுமான வீல் சேர் இல்லாததால் மனைவிக்கு மட்டும் வீல் சேர் ஏற்பாடு செய்யப்பட்டது. கணவரை சிறிது நேரம் காத்திருக்கும்படி ஊழியர்கள் அறிவுறுத்தினர். ஆனால், மனைவியை தனியாக அனுப்ப விரும்பாத கணவர், நடந்தே சென்றார். சுமார் 1.5 கி.மீ., நடந்து சென்ற அவர் மயங்கி விழுந்து உயிரிழந்தார். இது தொடர்பாக டிஜிசிஏ விசாரணைக்கு உத்தரவிட்டது.

செய்தி : கோகுல்