வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான டி20 தொடர் வருகிற மார்ச் 4 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.
இந்த நிலையில், வங்கதேசத்துக்கு எதிரான டி20 தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
டி20 தொடருக்கான இலங்கை அணி விவரம்
வனிந்து ஹசரங்கா (கேப்டன்), சரித் அசலங்கா (துணைக் கேப்டன்), குசால் மெண்டிஸ், சதீரா சமரவிக்கிரம, ஏஞ்சலோ மேத்யூஸ், தசுன் ஷானகா, மஹீஷ் தீக்ஷனா, தனஞ்ஜெயா டி சில்வா, குசால் ஜனித் பெரேரா, தில்ஷன் மதுஷங்கா, நுவான் துஷாரா, மதீஷா பதிரானா, அகிலா தனஞ்ஜெயா, பினுரா ஃபெர்னாண்டோ, கமிண்டு மெண்டிஸ், அவிஸ்கா ஃபெர்னாண்டோ மற்றும் ஜெஃப்ரே வாண்டர்சே.
செய்தி ஜி ரமேஷ் சென்னை