தமிழக அரசு முறையாக செயல்படவில்லை: உயர்நீதிமன்றம்.

சீமைக்கருவேலத்தை அகற்ற ராக்கெட் வேண்டுமா.? – தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி.

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் விவகாரத்தில் தமிழக அரசு முறையாக செயல்படவில்லை. தமிழக அரசு கடமைக்காக வழக்கை நடத்துவது போல உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி.

வனப்பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் உள்ள சிரமத்தை புரிந்து கொள்ள முடிகிறது. சமதள பகுதிகளில் உள்ள சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதில் என்ன சிரமம்?

ஒரு கிராமம் அல்லது ஒரு பஞ்சாயத்தில் கூட முழுமையாக சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படவில்லை. சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கு ராக்கெட் தொழில்நுட்பம் தேவையில்லை.

சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகள் குறித்தும், 30 கோடி ரூபாய் செலவு செய்துள்ளது குறித்தும் தமிழக அரசு அறிக்கை தாக்கல்.

சீமைக்கருவேல மரங்களை அகற்றக்கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் கேள்வி

செய்தி : ராகுல்