சார்பதிவாளர் அலுவலகம் வந்த ரஜினியால் பரபரப்பு

 நாவலூரில் சொத்து வாங்கி பதிவு செய்வதற்காக திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் வந்தார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது

ஓஎம்ஆர் சாலையில் மருத்துவமனை ஒன்றை கட்ட ரஜினி முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதையடுத்து தனது நண்பர்கள் மூலம் நிலம் ேதடுதல் பணியில் ஈடுபட்டுள்ளார்

பத்திரப்பதிவு செய்வதற்காக நேற்று காலை திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகத்திற்கு அவர் வந்தார். இதனால் காலை 9 மணி முதல் அங்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 9.45 மணிக்கு உள்ளே வந்த ரஜினியை பதிவுத்துறை செங்கல்பட்டு மண்டல டி.ஐ.ஜி ராஜ்குமார், மாவட்ட பதிவாளர் அறிவழகன், திருப்போரூர் சார்பதிவாளர் (பொறுப்பு) சக்திபிரகாஷ் வரவேற்றனர். இதையடுத்து, உள்ளே சென்ற ரஜினியை பதிவுத்துறை அலுவலர்கள் புகைப்படம் எடுத்து பயோமெட்ரிக் கைரேகை பதிவு செய்தனர். மொத்தம் 6 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டன. இதையடுத்து 10.30 மணிக்கு ரஜினி புறப்பட்டு சென்றார்.ரஜினி வந்த தகவல் அறிந்ததும் சார்பதிவாளர் அலுவலகம் முன்பு ஏராளமான ரசிகர்கள் கூட்டம் திரண்டதுதிருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்த ரஜினியால் பரபரப்பு