48 நாட்களில் திருமணம் நடக்க செய்ய வேண்டிய பரிகாரம்

திருமணம் நடக்க பரிகாரம் திருமணம் நடக்க வேண்டும் என்றால் உங்களுடைய வீட்டில் நெல்லி செடியை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றி வளர்த்து வர வேண்டும். அம்பாளை நினைத்து இந்த நெல்லி செடியை உங்க வீட்ல வையுங்க. நெல்லி செடியை எத்தனை முறை பார்த்துக் கொண்டே இருக்கிறீர்களோ அவ்வளவு சீக்கிரம், அவ்வளவு எளிதில் உங்களுக்கு திருமணம் நடந்து விடும். உங்களுடைய மொபைல் போன் ஸ்கிரீன் சேவராக, டிபியாக இந்த நெல்லி மரத்தை வைத்துக் கொள்ளுங்கள்.

அது மட்டும் இல்லாமல் தினமும் நெல்லிக்காயில் ஒரு சிறு துண்டாவது சாப்பிட வேண்டும். ஊறுகாயாகவாவது சாப்பாட்டில் ஒரு துண்டு நெல்லிக்காயை சேர்த்துக் கொள்ளவும். நெல்லி மரத்துக்கு அப்படி ஒரு பவர். நெல்லி மரத்தை முடிந்தால் ஐந்து முறை வலம் வாருங்கள். தவறே கிடையாது. சீக்கிரம் திருமண யோகம் உங்களை தேடி வரும். அது மட்டும் இல்லாமல் உங்களுடைய பிரார்த்தனையை அந்த நெல்லி மரத்திடம் மனம் உருகி ஒரு இரண்டு நிமிடம் சொல்லுங்கள் நிச்சயம் நல்லது நடக்கும். இதோடு வெள்ளிக்கிழமை வாராகிக்கு உங்கள் கையால் இந்த மாலையை கட்டி போடுங்கள். வெள்ளிக்கிழமை சரியாக ராகு கால நேரத்தில், இந்த மாலையை வாராகி அன்னைக்கு செலுத்த வேண்டும். 21 விரலி மஞ்சள் எடுத்துக்கோங்க. அதை ஒரு மஞ்சள் கயிறில், பூ கட்டுவது போல கட்டி, உங்க வீட்டு பக்கத்தில் கோவிலில் இருக்கும் வாராகி அன்னையின் திருவுருவ சிலைக்கு இந்த மாலையை சாத்த வேண்டும்.