வீட்டில் ஐஸ்வர்யம் நிரந்தரமாக தங்க தசமி திதியில் செய்ய வேண்டிய பூஜை

ஐஸ்வர்ய கடாட்சம் நிலைத்து நிற்க பூஜை இந்த பூஜையை கட்டாயம் தசமி திதி அன்று தான் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த பூஜைக்கு உண்டான பவர் முழுமையாக உங்களுக்கு கிடைக்கும். மாதத்தில் ஒரு நாள் தசமி திதி வரும். அந்த நாளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். வழக்கம்போல பூஜை அறையை சுத்தம் செய்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள். வீடெல்லாம் சுத்தம் பத்தமாக இருக்க வேண்டும். பூஜையறையில் 9 தாம்பூல தட்டுகள் தேவை. 9 தாம்பூல தட்டிலும் பச்சரிசியை பரப்பி வைக்க வேண்டும். 1/4 கிலோ பச்சரிசியை கொட்டி அந்த தாம்பூல தட்டில் முழுமையாக பரப்பி வைத்து விட்டு, அதற்கு மேலே 1 மட்டை தேங்காய், 2 வளையல், வெற்றிலை, பாக்கு, வாழைபழம் தாம்பூலம், பூ, மருதாணி, சீப்பு இப்படி பெண்கள் பயன்படுத்தக்கூடிய மங்களப் பொருட்கள் உங்களால் என்ன வைக்க முடியுமோ அதை வைத்து அப்படியே பூஜை செய்ய வேண்டும். இந்த பொருட்களில் மிக மிக அவசியமான பொருள் ‘மட்டை தேங்காய்’. – Advertisement –